Clock

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

கணினியில் அழித்த பைல்களை மீண்டும் பெறுவது எப்படி?


     தங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்பது எப்படி? தாங்கள் அழித்த பைல் Recycle Binயில் இருந்தால் சரி....அதை Restore தந்து மீண்டும் பெறலாம், ஆனால் Recycle Bin இருந்து அழிந்த பைல்களை மீட்பது அதாவது மீண்டும் பெறுவது என்பதை பற்றி தான் கூற இருக்கிறேன்.

     நாம் சில சமயங்களில் ஏன்..பல சமயங்களில் சில பைல்களை தெரியாமல் அழித்துவிடுவோம்...பிறகு தான் தெரியும் ஆகா! ஆகா! அந்த பைல் மீண்டும் வேண்டுமே என்று...அப்படிபட்ட சூழ்நிலையை கையாள மிக அருமையான மென்பொருள் ஒன்று உள்ளது . அதன் பெயர் Recuva.

     இதன் மூலம் தங்கள் கணினியில் அழிந்த எந்த வகையான பைல்களையும் மீண்டும் பெறலாம்...அனைத்து டிரைவுகளிலும், மேலும் Removable டிரைவுகளான பென்டிரைவ், மெமரிகார்டு போன்றவற்றில் அழித்த பைல்களை கூட மீண்டும் பெறலாம்...இதில் மிக சந்தோசமான செய்தி என்வென்றால் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமே!



     நான் தற்போது தாங்களுக்கு இந்த மென்பொருள் எப்படி பயன்படுத்துவது என விளக்குகிறேன்...முதலில் இந்த மென்பொருளை தங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள். பின்னர் இதை இயக்குங்கள்...தற்போது தாங்களுக்கு பைலின் வகை படுத்த ஓர் விண்டோ தோன்றும். இதில் தாங்கள் தேடயிருக்கும் பைலின் வகையை தேர்வு செய்யவும்..

பின்னர் NEXT என்பதை அழுத்தவும்...தற்போது தாங்கள் தேட இருக்கும் பைலின் இருப்பிடத்தை தேர்வுசெய்யவு. உதரணமாக நான் எனது பென்டிரைபில் அழிந்த பைல்களை தேட எண்ணுகிறேன் என்றால். On my video card or ipod என்பதை தேர்வு செய்ய வேண்டும்...இல்லை எனக்கு அனைத்து டிரைவுகளிலும் தேட வேண்டும் என்றால் I'am not sure என்பதை தேர்வு செய்யவும்...

     பின்னர் Next என்பதை தேர்வு செய்ய வேண்டும்...தற்போது தோன்றும் திரையில் கீழே Enable Deep Scan என இருக்கிறதா! இது எதற்கு என்றால் நன்கு ஆழமாக தேட வேண்டும் என்றால் இதன் அருகில் இருக்கும் பெட்டியில் டிக் குறியீட்டை இடவும்...

     பின்னர் Start என்பதை அழுத்துங்கள். சிறிது நேரம் காத்துயிருக்கவும்...தற்போது தேடப்பட்ட பைல்கள் அனைத்தும் காட்டப்படும்...
இதில் தாங்களுக்கு தேவைப்படும் படங்கள் தேர்வு செய்து. பின்னர் கடைசியாக  Recover என்பதை தரவும்....அவ்வளவு தான்...வேலை முடிந்தது...

மென்பொருளை பதிவிறக்க கீழே கிளிக் செய்யவும்:
Download this Software Click Down:
Download Link(1)
Download Link (2)
Download Link(3)

நோக்கியா மொபைல் போனினை SMSவைரஸிடம் இருந்து முழுமையாக பாதுகாக்க.


     தற்போது மொபைல் போன்களின் சந்தையில் உச்சத்தில் இருப்பது நோக்கியா நிறுவனமே. தற்போது இதன் சிறப்பை கெடுக்கும் வகையில் ஓர் புதிய எஸ்.எம்.எஸ் வகை வைரஸ் பரவிவருக்கிறது. கடந்த ஆண்டில் இதை போன்று ஓர் நிலை ஏற்ப்பட்டது தற்போது அது மீண்டும் பரவுவதாக சில கருத்துகள். எனது நண்பர் ஒருவர் கூறினார்.

     அவரது மொபைல் போனிற்கு ஓர் SMS வந்ததாகவும் அதனை திறக்க முற்ப்பட்டால் மொபைல் போன் உடனே ஆப் ஆகி விடுவதாக கூறினார். நான் இதை பற்றி மேலும் தகவல்கள் தேடியதில் இந்த வகை வைரஸ் ஆனது S60 Series வகை மொபைல் போன்களை மட்டுமே பாதிப்பாக தெரியவந்தது. போனின் சாப்ட்வேர் கொண்டு ரி-செட் செய்தால் போன் மீண்டும் இயங்குவதாகவும், ஆனால் அனைத்து தகவல்களை அழிந்துவிடுவதாகவும் தெரியவந்தது. இதனை அறிந்த நோக்கியா நிறுவனம், ஏற்கானவே இந்த வைரஸினை அழிக்க ஓர் ஆண்டிவைரஸ் மொன்பொருளினை மொபைல்போனிற்கு வழங்கி உள்ளது. இந்த வகை வைரசினை தடுக்க இந்த சாட்வேரினை தங்களின் போனில் பதிந்தால் போதும்.

இந்த ஆண்டிவைரஸினை பதிவிறக்க. கீழே கிளிக் செய்யவும்.

SMS Cleaner - S60 3rd Edition - Initial & Feature Pack 1


SMS Cleaner - S60 2nd Edition - Feature Pack 2

SMS Cleaner - S60 2nd Edition - Initial & Feature Pack 1

தங்களின் கணினியில் அனைத்து ஹார்ட்வேர் சாதனங்களும் நல்ல நிலையில் உள்ளதா?



தங்களின் கணினியில் உள்ள ஹார்ட்வேர் சாதனங்கள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளன என்பதை அறிவது எப்படி?

தங்களின் கணினியில் என்ன என்ன ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன, என்று தங்களுக்கு தெரியுமா? ம்ம்ம் நமக்கு தெரிந்த ஹார்ட்வேர் சாதனங்கள் ஹார்ட்டிஸ்க், மவுஸ், கீபோர்டு, மதர்போர்டு போன்ற சில சாதனங்கள் தெரியும். இன்னும் பல ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. இவை அனைத்தும் சரியாக தான் உள்ளனவா, நல்ல முறையில் அதன் பணிகளை செய்கிறது அல்லது ஏதேனும் பிரச்சனை உள்ளனவா? என்று எப்படி அறிவது.


நண்பா! நமது மென்பொருட்களின் ஏதேனும் பிரச்சனை என்றால் அது நமக்கு உடனே தெரிய வாய்ப்பு உள்ளது..அதனை சரி செய்து கொள்ளலாம். ஆனால் அதுவே நமது ஹார்ட்வேர் சாதனங்களில் ஏதேனும் பிரச்சனை என்றால் அது நமக்கு தெரிய வாய்ப்பேயில்லை, கடைசியில் அதன் செயல்பாட்டை இழக்கும் போதே அதன் பிரச்சனை தெரியும்....ஹார்ட்வேர் சாதனங்களில் ஏதேனும் பிரச்சனை என்றால் அது அதிக செலவை வைக்கும்.. கவனம்..

இப்போ பதிவோடு மேட்டருக்கும் வருவோம்... இப்போ பிரச்சனை என்னனா? நம்ம ஹார்ட்வேர் சாதங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளதா என்று அறிவது தான்.? கவலை வேண்டாம் இந்த குறையை போக்க ஓர் அருமையான மென்பொருள் உள்ளது. நானே இதை பயன்படுத்தி பார்த்தேன் மிக அருமை. நண்பா!

இந்த மென்பொருள் பெயர் PCWIZARD. இதனை தங்களின் கணினியில் நிறுவியவுடன், இது தங்களின் கணினியின் ஹார்ட்வேர் சாதங்களின் நிலையை சற்று ஆழமாக ஸ்கேன் செய்து, அவையின் தற்போதய நிலை, மற்றும் அவை நல்ல இயங்கு நிலையில் உள்ளனவா என்று கூறும். இதன் சிறப்பு என்ன என்றால். இது ஒவ்வொரு சாதனமாக தனித்து ஆராய்ந்து கூறும். மேலும் ஏதேனும் சாதனத்தில் கோளாறு இருந்தால், அதை மாற்றிவிடுமாறு கூறும்... மேலும் பல சுவரிசியமான தகவல்களை தருகிறது. நண்பர்களே.. உடனே பயன்படுத்துங்கள்.

இதனை பதிவிறக்க கீழே கிளிக் செய்யவும். 
DOWNLOAD THIS SOFTWARE CLICK BELOW LINK.

ftp://ftp.cpuid.com/pc-wizard/pc-wizard_2010.1.961-setup.exe

KASPERSKY ஆன்டிவைரஸினை இலவசமாக பயன்படுத்துவது எப்படி?


கணினி உலகின் சிறந்த ஆன்டிவைரஸ் தொகுப்பான KASPERSKY ஆன்டிவைரஸினை இலவசமாக பயன்படுத்துவது எப்படி என்று தான் இந்த பதிப்பு.
கணினியில் வைரஸின் தாக்கம் இல்லாமல் பாதுகாக்க தான் ஆன்டிவைரஸினை பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த ஆன்டிவைரஸினை பெற அதிக தொகையை செலுத்த வேண்டியுள்ளது. அப்படியே இலவச தொகுப்பினை பயன்படுத்தினாலும் அது அந்த அளவிற்கு கைக்கொடுப்பது இல்லை. அதே மாறி அப்டேட் செய்வதிலும் KASPERSKY ஆன்டிவைரஸ் சிறந்தது. மிக சிறிய சிறிய பைலாக அப்டேட் செய்துக்கொள்கிறது.
இந்த ஆன்டிவைரஸினை இலவசமாக பெற முதிலில் இதன் TRIALயை டவுண்லோட் செய்துக்கொள்ளுங்கள். DOWNLOAD TRIAL (http://www.kaspersky.com/kav-trial-register) இந்த லிங்கை பயன்படுத்தி டவுண்லோட் செய்துக்கொள்ளுங்கள். பின்னர் தங்களின் கணினியில் இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இந்த சிரியல் கீ பைல்களையும் டவுண்லோட் செய்துக்கொள்ளுங்கள். இது தான் முக்கியம் மிகவும்.DOWNLOAD SERIAL KEYS. (https://sites.google.com/site/mobile127java/home/KasperskySerial.rar?attredirects=0&d=1)

பின்னர் தங்களின் தங்களின் கணினியில் இண்டர்நெட் இணைப்பினை துண்டித்துவிட்டு விடுங்கள். பின்னர் KASPERSKYஆன்டிவைரஸ் தொகுப்பினை இயக்குங்கள், அதில் ACTIVATION PRODUCT என்பதினை கிளிக் செய்யவும். தற்போது ஓர் விண்டோ தோன்றும். அதில் கீழ்காணும் சிரியல் கீயினை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். உதவிக்கு படத்தினை காணவும், பின்னர் NEXT என்பதனை கிளிக் செய்யவும்.
SERIAL KEY TO PASTE:
11111-11111-11111-1111X



தற்போது தோன்றும் விண்டோவில் கீ பைலினை தேடவும் என குறிப்பிடப்படும். தற்போது நீங்கள் செய்ய வேண்டியது தான் முக்கியம். BROWSE என்பதனை கிளிக் செய்து நீங்கள் டவுண்லோட் செய்த சீரியல் கீ பைல்களை தேர்வு செய்யவும்.

பின்னர் NEXT  என்பதினை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் முடிந்தது. KASPERSKY ஆன்டிவைரஸினை தொகுப்பினை இலவசமாக பயன்படுத்தலாம்.....

தங்களின் பேஸ்புக் பிரண்ட்ஸ் லிஸ்டை பிறர் பார்வையில் இருந்து மறைக்க வேண்டிமா?


நாளுக்கு நாள் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. அதுவும் மின்னல் வேகத்தில். இதனால் பயன்யடைவர்களும் உண்டு, கேட்டுபோகிறவர்களும் உண்டு. இந்த மாதிரி சமூக வலைதளங்களை பயன்படுத்தினால் மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கிய ஒன்று, நம்மை பற்றி முக்கிய தகவல்களை இங்கு மற்றவர்களுடன் பகிற்வதை தவிற்ப்பது தான்.

இந்த பதிவும் அத்தகைய ஓர் செய்தி பற்றி தான். பேஸ்புக்கின் தளத்தில் தங்களின் பிரண்ட்ஸ் பற்றி விவரத்தை அனைவரும் அறியும் படி தான் பொதுவாக இருக்கும். இதை தாங்கள் மாற்ற விரும்பினால், அதாவது எனது நண்பர்களை தெரியாதவர்கள் எவரும் அறிவதை தாங்கள் விரும்பவில்லை என்றால்! இந்த பதிவு தங்களுக்கு தான். தொடர்ந்து படியுங்கள். இந்த செய்கையினை மேற்கொள்ள

STEP 01: முதலில் தங்களின் பேஸ்புக் அக்கொண்டில் நுழைந்துக்கொள்ளுங்கள்.


STEP 02: பின்னர் EDIT PROFILE என்பதினை கிளிக் செய்யுங்கள். உதவிக்கு மேலே உள்ள புகைப்படத்தை காணுங்கள்.


STEP 03: பின்னர் தோன்றும் விண்டோவில் வலதுகை ஓரத்தில் பார்த்தால் சில மெனுக்கள் இருக்கும் அதில் FRIENDS AND FAMILY என்பதினை கிளிக் செய்யவும்.
உதவிக்கு மேலே உள்ள புகைப்படத்தை காணுங்கள்.


STEP 04:தற்போது தோன்றும் திரையில் FRIENDS என்பததை கிளிக் செய்யவும். ஓரத்தில் சற்று உற்றி கவனித்தால் ஓர் உலக உருண்டை போன்ற ஜகான் ஒன்று இருக்கும் அதை கிளிக் செய்யவும்.


STEP 04: தற்போது சிறிய பாப் அப் விண்டோவை போன்று ஓன்று தோன்றும் அதில் மொத்தம் நான்கு வழிமுறைகள் இருக்கும். முதலில் 1.PUBLIC 2.FRIENDS 3.ONLY ME 4.CUSTOM.


PUBLIC: இதனை தாங்கள் தேர்வு செய்தால் தங்களின் பேஸ்புக்கின் பிரண்ட்ஸ் லிஸ்டை யார் வேண்டுமானலும் காணலாம்.


FRIENDS: இதனை தேர்வு செய்தால் தங்களின் பிரஸ்ட்ஸ் லிஸ்டை தங்களின் நண்பர்கள் மட்டுமே பார்க்க முடியும்.


ONLY ME: இதனை தேர்வு செய்தால் தங்களின் பிரண்ட்ஸ் லிஸ்டை நீங்கள் மட்டுமே பார்க்க இயலும்.


CUSTOM: இதனை தேர்வு செய்து, தாங்கள் குறிப்பிடும் சில பேருக்கும் மட்டும் தங்களின் பிர்ண்ட்ஸ் லிஸ்ட் பார்க்கும் மாறு அமைக்கலாம்.
இறுதியாக SAVE CHANGES என்பதனை கிளிக் செய்து, தங்களின் மாற்றங்களை தங்களின் அக்கொண்டில் செயல்போறுமாறு அமைத்துக்கொள்ளுங்கள்.