Clock

வியாழன், 23 பிப்ரவரி, 2012

ஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம்

ஒவ்வொரு இணையதளமும் அவர்களுக்கென ஒரு Logoவை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர். பதிவர்கள் நாம் இது சம்பந்தமாக பதிவு போடும் போதோ அல்லது widgetல் இணைக்கவோ அந்த ஐகான்களை உபயோகப் படுத்துகிறார்கள். ஐகான் தேடுவோருக்கு பயனுள்ள வகையில் ஒரு தளம் உதவி புரிகிறது. அந்த தளத்தை பற்றி இங்கு காண்போம். உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபமாக உள்ளது.
  • முதலில் இந்த linkல்  [http://www.iconwanted.com/en/login/registration/format/html ] சென்று உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். இது இலவச சேவை தான்.
  • உறுப்பினர் ஆகியவுடன் முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள்.
  • இந்த தளத்தில் Search என்ற linkஐ அழுத்தி உங்களுக்கு தேவையான ஐகானை தேடி கொள்ளும் வசதியும் உள்ளது.
  • ஐகான் தேடும் பொழுது Size வாரியாகவும்,Background நிறம் வாரியாகாவும் தேடிக்கொள்ளலாம்.

  • இதில் உங்களுக்கு பிடித்த ஐகான் மீது கிளிக் செய்தால் இன்னொரு பக்கம் open ஆகும். அதில் அந்த ஐகானின் டவுன்லோட் link இருக்கும்.
  • ஒரு ஐகானை பல்வேறு formatகளில் download செய்யும் வசதியும் அதில் காணப்படும்.

  • மேலும் இதிலுள்ள Free Icons லிங்கை கிளிக் செய்து சென்றால் ஐகான்களின் தொகுப்புகளை காணலாம். இதில் பலவேறு பிரிவுகளில் ஐகான்கள் காணப்படுகிறது.

இதில் உங்கள் விருப்பம் போல ஐகான்களை டவுன்லோட் செய்து உபயோகப் படுத்தி கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு செல்ல www.iconwanted.com

புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போனால்

Windows இயங்குதளங்களில் பல வேளைகளில் programme-கள் திடீரென முடங்கிப் போகும். MS Office தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். உலாவிகள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால் Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம்.
சில வேளைகளில் இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல் பிரச்னைகளைத் தரும். இறுதியாக reboot button அழுத்தி Windows சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம்.
சில வேளைகளில் ஏதேனும் ஒரு புதிய programme ஒன்றினை install  செய்திட முயற்சிக்கையில், அனைத்து programme-களையும் மூடிவிடவும் என்று ஒரு செய்தி கிடைக்கும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து programme-களையும் ஒவ்வொன்றாக முறையாக மூட வேண்டியதிருக்கும்.
இது நேரம் எடுக்கும் செயலாகும். அவசரத்தில் சில programme-களை மூட முடியாமல் முடங்கிப் போய் தொடக்கத்தில் குறிப்பிட்ட பிரச்னையைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.
இது போன்ற வேளைகளில் உதவிட நமக்கு இணையம் ஓர் இலவச programme ஒன்றைத் தருகிறது. End it All என்ற இந்த programme ஒரு வேலையை நமக்காக எளிதாகவும் விரைவாகவும் நிறைவேற்றுகிறது.
அது இயங்கும் அனைத்து programme-களையும் மூடுவதுதான். இந்த programme install செய்து விட்டால், பின் இயங்கும் programme-கள் அனைத்தையும் ஒரே click-ல் மூடிவிடலாம்.
இதனை install செய்து இயக்கினால் கிடைக்கும் மெனு நமக்கு விரைவான செயல்பாட்டினை மேற்கொள்ள வழி தருகிறது. “x” பட்டனை அழுத்தினால் programme-கள் மூடப்படுகின்றன.
அபாய சின்னம் கொண்ட button அழுத்தினால் அனைத்து புரோகிராம்களும் கொல்லப்படுகின்றன.
இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்றால் ஒரு புரோகிராமினை மூடுகையில் முறையாக அது மூடப்படும்.
ஆனால் அது முறையாக மூடப்படாவிட்டால் அது இருந்தது இருந்த நிலையில் கொல்லப்படும். இருப்பினும் முதல் விருப்பத் தேர்வினை முதலில் மேற்கொள்வதே நல்லது.
இந்த End it All புரோகிராமினை http://enditall.en.softonic.com/  என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள். அனைத்து windows பதிப்புகளிலும் இதனை நிறுவிக் கொள்ளலாம்.

இணைய வேகத்தை குறைக்கும் ஸ்பைவேர்களை நீக்க சிறந்த மென்பொருள்

இணைய வேகத்தை குறைக்கும் ஸ்பைவேர்களை  நீக்க சிறந்த மென்பொருளுக்கான  லிங்க் அதற்கான கீஜென் Keygen

புகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு


உங்களுக்கு தேவையான புகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம்.
இதற்கு Fast Stone Photo Resizer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. குறிப்பாக படங்கள் அனைத்தையும் ஒரே அளவிற்கு மாற்றிவிடுவதன் மூலம் அனைவரையும் ஈர்க்கலாம்.

அதுபோலவே வீட்டு விஷேசங்கள் போன்றவைகளுக்கு எடுத்தப் படங்களையும் இம்மென்பொருள் துணைகொண்டு படங்களை வேண்டிய அளவிற்கு சுருக்கி அல்லது விரித்து தேவையான பெயர் கொடுத்து மாற்றி சேமித்துக்கொள்ள முடியும்.

இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒவ்வொரு படமாக போட்டோஷாப் போன்ற மென்பொருள்களில் திறந்து அதை எடிட் செய்வதைக் காட்டிலும், இம்மென்பொருளைக் கொண்டு ஒரு கோப்பறையில் உள்ள புகைப்படங்கள் அனைத்தையும் வேண்டிய அளவிற்கு மாற்றி நாம் சேமித்துக்கொள்ளலாம்.

உதாரணமாக உங்களுக்கு ஒரு Photo Gallery அமைப்பதற்கு 500X400 px அளவிற்கு படங்கள்(images) வேண்டும் எனில் உங்களிடம் உள்ள புகைப்படங்களையோ அல்லது இணையத்தில் எடுத்த புகைப்படங்களையோ ஒரு பொதுவான கோப்பறை ஒன்றை உருவாக்கி அதில் போட்டு வையுங்கள்.

பிறகு இம்மென்பொருளை ஓபன் செய்ததும் தோன்றும் விண்டோவில் புகைப்படங்கள் அடங்கிய கோப்பறையை தேர்ந்தெடுத்து புகைப்படங்களின் அளவுகளை(500pxX400px) கொடுத்து ok கொடுத்தால் போதும்.

தரவிறக்க சுட்டி http://www.faststone.org/FSResizerDetail.htm

யூடியுப்பிலிருக்கும் வீடியோக்களை டிவிடியாக எளிதில் மாற்ற


யூடியுப்பிலிருக்கும் வீடியோக்களை ஒரு சின்ன மென்பொருளின் உதவியுடன் டிவிடியாக எளிதில் மாற்றலாம்.
இதற்கு முதலில் நீங்கள் டிவிடியாக மாற்ற வேண்டிய யூடியூப் வீடியோக்களை உங்கள் கணணியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

அதன் பின் இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதனை கிளிக் செய்தால் தோன்றும் விண்டோவில் உள்ள import கிளிக் செய்து உங்கள் யூடியுப் வீடியோக்களை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

எத்தனை படங்கள் வேண்டுமானாலும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின் தோன்றும் விண்டோவில் நீங்கள் தெரிவு செய்த படத்திற்கான அளவினை காணலாம். அதைப்போல டிவிடியின கொள்ளளவு எத்தனை ஜி.பி என்பதனையும் நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம். இதனை Preview பார்க்கும் வசதியும் உள்ளது.

இதில் உள்ள மெனுவை தெரிவு செய்தால் எட்டுவிதமான ஸ்லைடுகள் உங்களுக்கு கிடைக்கும், இதில் தேவையானதை தெரிவு செய்து கொள்ளலாம். கடைசியாக பார்ன் கொடுங்கள். அதற்கு முன் உங்கள் டிவிடிக்கு பெயரையும் நீங்கள் வைக்கலாம்.

தரவிறக்க http://www.4shared.com/file/8m-nxe-0/dvd-creator_full619.html

உங்களின் இந்த ஆண்டு வருமானவரியை கணக்கிட


உங்களின் இந்த ஆண்டு வருமானவரியை கணக்கிட இந்த excel sheet உங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்…

தனது சேவையை நீருக்கு அடியிலும் விஸ்தரிக்கு​ம் கூகுள் ஏர்த்

 தாம் பிறந்த ஊரிலேயே பல இடங்களை பார்த்து இரசிக்க முடியாதவர்களையும் இருந்த இடத்திலிருந்தே உலகின் அனைத்து பகுதிகளையும் பார்த்து இரசிக்கும் வசதியை கூகுள் எர்த் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.


தற்போது நீரிற்கு அடியிலுள்ள பகுதிகளையும் நமது கண்முன்னே கொண்டுவரும் பொருட்டு தனது சேவையை விஸ்தரிக்கவுள்ளது.
இச்சேவையின் மூலம் கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டர் வரையான ஆழமான பகுதியை அவதானிக்க முடியும்.
இதன் ஆரம்ப கட்டமாக கடற்படுக்கைகளின் 50,000 படங்கள் இணைக்கப்பட்டு 360 டிகிரியில் சுற்றிப்பார்க்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனால் மாணவர்கள் உட்பட விஞ்ஞானிகளும் பயனடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் எர்த்தை டவுன்லோட் செய்ய